சிம்மம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:38 IST)
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது.


பலன்:
எந்த சூழ்நிலையிலும் தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சிம்ம ராசியினரே, இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு: திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.

மாணவர்களுக்கு: திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

மகம்:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பூரம்:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

உத்திரம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை  அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 03, 04.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்