கும்ப ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (14:09 IST)
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கும்பம் பந்தம் என்பதற்கேற்ப சொந்த பந்தங்களின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே,



இந்த மாதம்  போதிய அளவில் பணம் வந்து தேவையை பூர்த்தி பண்ணும் கால கட்டம். தீவிர முயற்சிகலளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். கேளிக்கை வினோதங்களில் அதிக ஈடுபட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள நேரிடலாம்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். தடைகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வெளியூர் பயணத்தின் மூலம் ஏற்படும் நற்பெயரை கெடுத்துக் கொள்ளாமல் நற்பலன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தொழிலதிபர்கள் தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். எதிலும் புதிய முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இல்லையெனில் அவர்களால் தொந்தரவுகள் வரலாம். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். தங்களின் தீவிர முயற்சிக்கு பலனை எதிர்ப்பார்க்கலாம். பெண்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியின் மிகுதியால் அலட்சியமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நாவடக்கம் மிகத் தேவை. உடல் நலத்தில் தீவிர அக்கறையும், கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகளால் நற்செய்தி, முன்னேற்றம் உண்டு. அதிகமாக யாரிடனும் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். வேலக்குச் செல்லும் பெண்களுக்கு அவ்வப்போது பிரச்சனைகள் வந்து மறையும்.

கலைஞர்கள் கலைத் துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உடனிருப்போரிடம் எந்த விதமான ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிப்பாக நடத்துவார்கள்.  அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். ஆனாலும் மிகக் குறைந்த அளவே பலனை எதிர்பார்க்க முடியும். சிலரை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் செயல்களால் உங்களுக்கு மன உளைச்சல் வரலாம். மனநிம்மதி கிடைப்பதற்கு தியானம் செய்யுங்கள். அரசு அலுவலக விசயங்கள் அனைத்தும் திட்டமிட்ட படி நடக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படிப்பது நல்லது. சமூக சேவைகள் செய்ய ஆசிரியர்கள் பணிப்பார்கள். நண்பர்களுக்கு பிரதிபலன் பாராது உதவி புரிவீர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் நற்பெயரும் உண்டு. பலரது பாராட்டுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலிக்கு சென்று வாருங்கள். (காலை 6மணி முதல் 7 மணி வரை)

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்