மகரம் - மார்கழி மாத பலன்கள் 2021

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (15:00 IST)
உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரக நிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ராசியில் சுக், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எந்த சூழ்நிலையிலும் வார்த்தை தவறாமல் நிதானத்தை கடைப்பிடிக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். 
 
குடும்பத்தில் தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். 
 
வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். காகிதப்பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். 
 
பெண்கள் நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
 
கலைத்துறையினர் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். 
 
அரசியல்வாதிகள் மக்களுக்காக சேவை செய்வதில் சில காலம் மந்தமாக செயல்பட்டு வந்தவர்கள் எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் அதிகரிக்கும்.
 
மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
திருவோணம்:
இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவபங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
 
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்