மகரம்: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

Webdunia
கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
சாமர்த்தியமாக செயலாற்ற தெரிந்த மகர ராசி அன்பர்களே சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். இந்த மாதம் மனதில் நம்பிக்கை  உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும்.  சனியின் சஞ்சாரம்  எதிர்ப்புகளை விலக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
 
குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை  வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். பெண்களுக்கு எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம்  உண்டாகும். 
 
கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள்  பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும்  நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  
 
அரசியல்துறையினருக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச்  சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். 
 
மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். 
 
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.
 
திருவோணம்:
இந்த மாதம்  மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
 
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம்  கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு  விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
 
பரிகாரம்: திருவோணம் தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் - 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல் - 15, 16, 17; மே - 12, 13, 14.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்