கடகம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (16:25 IST)
புனர் பூசம் 4ம் பாதம், சம், ஆயில்யம்) - கிரகநிலை: தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர  ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
 
பொது காரியங்களில் விருப்பம் உள்ள கடக ராசி அன்பர்களே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின்  மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள்  செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும்  கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
 
பெண்களுக்கு அறிவுத் திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்பார்க்கலாம்.
 
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.
 
மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச்: 5, 6
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி: 13, 14; மார்ச்: 11, 12, 13.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்