மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா ட்ரைலர் வெளியீடு!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (17:36 IST)
மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் விக்ரம் வேதா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.


 
 
வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வரும் நிலையில் படத்தை வருகிற ஜுலை 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
 
இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் பிறந்தநாளான இன்று இப்படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்து, டீசரை பாலிவுட் பிரபலம் ஷாரூக் கான் மற்றும்  சிவகார்திகேயன் இணைந்து இன்று வெளியிடுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது விக்ரம் வேதா  டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்