ஒரிஜனலவே நான் வில்லன்மா...வெளுத்து வாங்கும் ரஜினி - தர்பார் ட்ரைலர்!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (19:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியானது. 
 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் "சும்மா கிழி" பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் வெளிவந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. அதையடுத்து சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் விழாவை தொடர்ந்து லிரிகள் வீடியோ பாடல்கள் வெளிவந்து பட்டைய கிளப்பியது.
 
இந்நிலையில் ட்ரைலர் குறித்து நேரத்தை விட  சற்று தாமதமாக வெளியவந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு வேற லெவல் ஹேப்பினஸ் கொடுத்துள்ளது. இந்த ட்ரைலரில் போலீஸ் கதாபாத்திரத்தில் செம்ம ஸ்டைலாக ஒவ்வொரு காட்சிகளிலும் அற்புதமாக தோன்றுகிறார் ரஜினி. ட்ரைலரில் ஃபேன்ஸ் மூமென்ட்ஸ் இவ்வளவு நிரம்பியுள்ளதால் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் நிச்சயம்  தர்பாரான பொங்கலாக தான் இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்