முதல் படமே லாபம்: சாண்டியின் ‘3:33’ தயாரிப்பாளர் அறிக்கை!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (18:47 IST)
நடன இயக்குனர் சாண்டி முக்கிய வேடத்தில் நடித்த ‘3:33’ என்ற திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தாங்கள் தயாரித்த முதல் படமே லாபத்தில் லாபமான படமாக அமைந்துள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது
 
எங்கள் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ’3;33’ கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. எங்கள் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நாங்கள் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
 
ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இந்த படத்தை திரை அரங்கிற்கு கொண்டு வந்த விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் மக்களாகிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
 
எங்களுக்கு குறைந்த திரையரங்குகளை கிடைத்திருந்தாலும் மக்களின் பேராதரவால் இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்ததற்கான தொகை முழுவதும் எங்களுக்கு திரும்ப கிடைத்து விட்டது என்பதை நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் இந்த ஆதரவு எங்களை போல் உள்ள புதிய தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது. மீண்டும் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை மிக விரைவில் வெளியிடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்