மீண்டும் ரஜினியோடு மோதும் அஜித்… இந்த முறை வெல்லப்போவது யார்?

Webdunia
சனி, 1 மே 2021 (19:07 IST)
அஜித்தின் வலிமை திரைப்படம் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தோடு மோத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருக்கும் நிலையில் படம் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக சில மாதங்கள் தள்ளிப்போய் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் ரிலீஸாகிறது. 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதி வசூல் சாதனை படைத்தன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்