எம்ஜிஆர் என்றால் பிரச்சனை, என்டிஆர் என்றால்...?

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2013 (13:36 IST)
மத கஜ ராஜா செப்டம்பர் 6 விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வெளியீடாக வருகிறது. விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்திருக்கும் இந்தப் படம் ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.
FILE

மத கஜ ராஜாவின் முதல் ஆங்கில எழுத்துக்களை இணைத்து, எம்ஜிஆர் என்ற பெயரில் படத்தை வெளியிடும் திட்டமிருந்தது. டைம் டு லீட் டேக்லைனுக்காக தலைவா டீம் கதறி துடித்ததை கண்டபிறகும் எம்ஜிஆர் ஆசை இருக்குமா விஷாலிடம். அப்படியே வழித்தெறிந்துவிட்டு மீண்டும் மத கஜ ராஜாவுக்கு மாறியிருக்கிறது பெயர்.

தெலுங்கில் படத்தின் பெயர் என்டிஆர். எம்ஜிஆர் அளவுக்கு ஆந்திராவில் என்டிஆருக்கு மவுசு இல்லை போலிருக்கிறது. எதிர்ப்பு இல்லாததால் என்டிஆர் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார்கள்.

இதுவரை விஷால் தனது படங்களை பிரமோட் செய்ய கேரளா சென்றதில்லை. இந்தமுறை மத கஜ ராஜாவுக்காக செப்.2 ஆம் தேதி வரலட்சுமி மற்றும் சுந்தர் சி. யுடன் கேரளா செல்கிறார். அஞ்சலி...?

அவரை தேடிப் பிடிப்பதற்குள் ஆறுமாசமாயிடும் என சலித்துக் கொள்கிறது மத கஜ ராஜா யூனிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி