சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பபூன்’ பர்ஸ்ட் சிங்கிள் ”மடிச்சி வச்ச வெத்தல”… வெளியிடும் பிரபலம்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (09:15 IST)
சந்தோஷ் நாராயணன் இசையில் பபூன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட உள்ளார்.

தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தயாரித்து வரும் கார்த்திக் சுப்பராஜ் தனது ஐந்தாவது தயாரிப்பாக தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பில் பபூன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். நடிகர் வைபவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான ‘மடிச்சி வச்ச வெத்தல’ பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார். இது சம்மந்தமான போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்