''அந்தப் பெயரை மாற்றச் சொல்லி மிரட்டினார்கள் -ரஜினி பட இயக்குநர் தகவல்

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:54 IST)
காந்தியைப் பற்றி   நீங்கள் கூறலாம் ஆனால் கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக ஒரஅ அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு நர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ஜிகர் தண்டா, பீட்சா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மகான். இப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன. விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில் இப்படத்தில் துப்பாக்கி எடுத்துக் கொல்ல வரும் ஒருவரைப் பார்த்து, உங்களை மாதிரி கொள்கை வெறி பிடித்தவன் தான் காந்தியைக் கொன்றான் என்ற டயலாக்கை வைக்க  நினைத்ததாகவும், ஆனால், காந்தியைப் பற்றி   நீங்கள் கூறலாம் காந்தியைக் கொன்ற கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக  அவர் ஒரு பிரபல டிவி பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்