’மஹான்’ திரைப்படத்தை பாராட்டி போன் செய்த தலைவர்: கார்த்திக் சுப்புராஜ் டுவிட்

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:35 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’மஹான்’ திரைப்படம் ஓடிடியில் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து  பாராட்டி போன் செய்ததாக தனது டுவிட்டரில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
 
விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக்கிய ’மஹான்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தை பாராட்டி தனக்கு போன் செய்ததாகவும் அவருடைய பாராட்டுதலுக்கு நன்றி என்றும் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
 ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் அவர் நடிக்கும் திரைப்படத்தை விரைவில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்