அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது… GOAT படம் பற்றி யுவன் கொடுத்த அப்டேட்!

vinoth

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:28 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் இப்போது யுவன் சங்கர் ராஜா GOAT படம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் இப்போது படம் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க வுள்ளன. அப்போது அனைத்து அப்டேட்களும் வெளிவரும் உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருக்கிறேன்.  அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்