விஜய்யை அடுத்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் விஷால்.. விரைவில் அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (06:52 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் நடிகர் விஷால் அடுத்ததாக அரசியல் கட்சி தொடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவரும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டே அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் நடிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரைபட தனிக்கட்சி ஆரம்பித்தனர் என்பதும் தெரிந்தது.

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக விஷால் தனது மக்கள் நல இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக அவர் ரசிகர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஷால் உள்பட அவரது கட்சியினர் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்