’கோமாளி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா!

திங்கள், 20 டிசம்பர் 2021 (14:46 IST)
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்துக்கு இசையமைக்க யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ’கோமாளி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதும் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை பிரதீப் ரங்கனதன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவருடன் இணைந்து பணி புரிவதில் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் பிரதீப் ரங்கனதன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்