அஸ்வினின் கோமாளித்தனமான பேச்சால் பாதிக்கப்படுகிறதா என்ன சொல்ல போகிறாய் ரிலிஸ்!

சனி, 18 டிசம்பர் 2021 (10:22 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அஸ்வின் குமார்.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதனால் அதிகம் பாதிக்க பட்டிருப்பது அந்த படத்தின் தயாரிப்பாளர்தான். ஏனென்றால் இந்த மாதக் கடைசியில் அந்த படத்தை ரிலிஸ் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தார். ஆனால் அஸ்வின் பேச்சு படத்தின் மீது ஒரு விதமான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதால், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த படத்தை வாங்க அஞ்சுகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்