’வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இல்லையா? அதிர்ச்சி தகவல்
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:47 IST)
அஜித் நடித்த வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் இசையமைப்பில் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன என்றும் மற்ற பாடல்கள் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென வலிமை படத்தின் பின்னணி இசையமைப்பாளர் வேறு ஒருவர் என்றும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது
இயக்குனர் எச். வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்த ஜிப்ரான் தான் வலிமை படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெறும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது