வலிமை படம் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? படக்குழு விளக்கம்

சனி, 1 ஜனவரி 2022 (18:22 IST)
'வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர்வைரலானது.

இந்நிலையில் ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் வரும் பொங்கலுக்கு ரீலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் தள்ளிப்போனது. அதேபோல், அஜித்தின் வலிமை படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள படக்குழு வலிமை படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகும் உறுதி என தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனவரி 13 என்பது வியாழக்கிழமை என்பதும் அஜித்திற்கு சென்டிமென்டான தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்