இயக்குனர் செல்வராகவன் இயக்கிய படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். பல செல்போன்களிலும் யுவன் + செல்வராகவன் என கண்டிப்பாக ஒரு பிளே லிஸ்ட் இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. செல்வராகவனும் ஜி வி பிரகாஷ், ஹேரிஸ் ஜெயராஜ் என ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் மீண்டும் யுவனுடனேயே கூட்டணி அமைத்தார்.