16 ஆண்டுகளைக் கடந்த எம் குமரன் திரைப்படம்… படப்பிடிப்பு தளத்தில் இளம் நடிகர்களின் விண்டேஜ் புகைப்படம்!

வியாழன், 1 அக்டோபர் 2020 (16:44 IST)
நடிகர் ஜெயம் ரவி அசின் மற்றும் நதியா அகியோர் நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

ஜெயம் ரவி தனது அண்ணன் இயக்கத்தில் இரண்டாவதாக நடித்த திரைப்படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இதில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை நதியா தமிழ் சினிமாவில் நடித்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ரிலிஸாகி இப்போது 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜையின் போது இளம் நடிகர்களாக தனுஷ், சிபிராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜெயம் ரவி மற்றும் நதியாவுடன் இருக்கும் புகைப்படம் இப்போது வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்