திடீரென மேனேஜரை நீக்கிய யோகிபாபு: என்ன காரணம்?

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:15 IST)
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு திடீரென தனது மேனேஜரை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக சசி என்பவர் யோகிபாபுவின் மேனேஜராக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென அவரை யோகி பாபு நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது
 
ஆனால் இதுகுறித்து யோகி பாபு கூறுகையில் தன்னுடைய மேனேஜராக இருந்த சசி தன்னுடைய சொந்த பணியின் காரணமாக தன்னிடமிருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
 ஆனால் மேனேஜரை யோகிபாபுவுக்கு நீக்கியதற்கு முக்கிய காரணம் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன
 
மேலும் இனிமேல் தனக்கு யாரும் மேனேஜர் கிடையாது என்றும் தானே நேரடியாக கால்ஷீட் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
எனவே யோகிபாபுவை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவரை நேரடியாக அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்