நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தற்போது அவர் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோதும் விபத்தில் சிக்கியதாக போர்ச்சுக்கல் நாட்டின் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: "இங்கு பயிற்சி செய்து கொண்டிருந்த போது எனக்கு மீண்டும் விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து நடந்ததும் எங்கள் குழுவினர் விரைவாக செயல்பட்டு என்னை மீட்டனர். தற்போது நான் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.