இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.
இதில் முதல்படமாக சிம்பு- ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதாநாயகியாக சாய்பல்லவியை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.