ஆமாம்... விஜய்யும், அமலா பாலும் பிரிகிறார்கள்... விஜய்யின் அப்பாவே சொல்லிட்டார்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (10:23 IST)
விஜய்யும், அமலா பாலும் பிரிவதை விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் உறுதி செய்துள்ளார்.


 
 
இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலும் கடந்த 2014 -இல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டே வருடங்களில் இல்லறம் கசந்து இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு. இருவரும் பிரிகிறார்கள் என்று வந்த தகவலை இருதரப்பும் உறுதி செய்யாமலிருந்தது. இந்நிலையில், பேட்டியொன்றில், அமலா பாலுடனான திருமண முறிவு குறித்த கேள்விக்கு, என்னுடை பெற்றோர் சொல்வதற்கு கட்டுப்படுவேன் என்று திருமண முறிவை உறுதி  செய்தார் விஜய்.
 
இப்போது அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய சம்மதித்துள்ளதாக  கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்