ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் இரண்டு பேர் வெளியாறினால்தான் இறுதிப்போட்டிக்கு நால்வர் செல்ல முடியும். அந்த வகையில் ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, பாலாஜி மற்றும் ஐவரில் இருவர் வெளியேற வேண்டும். ஜனனி கோல்டன் டிக்கெட்டை வைத்துள்ளதால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்து யாஷிகாவை இணைபிரியாமல் ஒரே படுக்கையில் படுத்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, அடுத்த வாரம் முழுவதும் தனிமையில் விடப்படுகிறார். மூன்று தமிழ்ப்பெண்கள் ஒருபக்கமும், ஐஸ்வர்யா ஒருபக்கமும் இருப்பதால் ஐஸ்வர்யா, முழுசா சந்திரமுகியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது