தீராத தோல் வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (14:34 IST)
நடிகை யாமி கவுதம் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 
படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் என கவனம் செலுத்தி வருபவர் நடிகை யாமி கவுதம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியில் அதிக கவனம் செலுத்தி பணிபுரிந்து வருகிறார். 
 
கடந்த 2019 'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஆதித்யா தர் உடன் காதல் வயப்பட்டு கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதனிடையே நடிகை யாமி கவுதம், பல வருடங்களாக தான் Keratosis Floris என்ற தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 
கெரட்டோசிஸ் பிலாரிஸ் ( Keratosis Floris) என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. புல்லரித்தால் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ, அது போல தோல் நிரந்தரமாக மாறிவிடும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்