'தளபதி 62' படத்திற்கும் 'இந்தியன் 2' படத்திற்கும் உள்ள ஒற்றுமை
செவ்வாய், 23 ஜனவரி 2018 (23:35 IST)
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமீபத்தில் வசனகர்த்தாவாக இணைந்தார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்திலும் வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஒரே நேரத்தில் விஜய் மற்றும் கமல் படங்களில் வாய்ப்பு தனது முதன்முதலாக கிடைத்துள்ளதாகவும், இந்த இரண்டு படங்களுக்கும் தனது வசனங்கள் முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கும் என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளதாக முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
இந்த நிலையில் வரும் மார்ச் முதல் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.