போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவ, மாணவிகள் ; மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு? (வீடியோ)

செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:48 IST)
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பேருந்து கட்டண விலை உயர்வை கண்டித்து கரூர்  தான்தோன்றி மலை  அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள்  வகுப்புகளை புறக்கணித்து  கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 5 ரூபாய் பேருந்து கட்டணம் இப்போது ரூ 1Oஆக உயர்த்தி உள்ளனர். இதனால் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.  விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனையில் அக்கறை காட்டாத அரசு தற்போது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்படைய செய்துள்ளது. என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு குரல் கொடுத்த மாணவர்கள் இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஒன்று திரளும் சூழ்நிலை உருவாகும் என்றனர்.
 
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கண்டித்து சொந்த தொகுதியிலேயே மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சி. ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்