தனியார் உணவு விடுதியில் உணவில் புழு,தமிழ் சினிமா நடிகருக்கு நடந்த பகீர் அனுபவம்!

J.Durai

திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:49 IST)
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் விஜய் விஷ்வா, ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார்.
 
அங்குள்ள Mciver villa ஹோட்டலில் சாப்பிட சென்றபோது உணவில் வாடை அடிக்கவே சாஸ் பாட்டிலை திறந்து பார்த்திருக்கிறார்கள்.
 
அது முழுக்க புழுவாக இருந்துள்ளது. சாப்பிட்டவர்கள் வாந்தியெடுத்துள்ளனர். 
 
இதை புகார் அளிக்க ஹோட்டல்காரர்கள் கண்டுகொள்ளவே இல்லையாம்.
 
இனிமேல் சுற்றுலா செல்பவர்கள் வெளியில் சாப்பிடும்போது கவனமாக இருங்கள் இது உங்களுக்கும் நடக்கலாம் என்று நடிகர் விஜய் விஷ்வா  வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஹீரோ விஜய் விஷ்வா பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்