இயக்குநர் ராம் கோபால் வர்மா டிவிட்டரில் பதிவிட்டாலே அது சர்ச்சையில்தான் முடிகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு மற்றும் மகளிர் தின வாழ்த்தை சன்னிலியோனுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்ததால் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. கடந்த சில நாட்களாக தனது டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் பவன் கல்யாணையும், தற்போது கட்டமராயுடு படத்தையும் கழுவி ஊற்றி வருகிறார்.
இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள ராம் கோபல் வர்மா, “ 30 கோடிக்கு படம் எடுத்து, அதை 100 கோடிக்கு விற்பனை செய்து, மீதமுள்ள 70 கோடியில் மகளின் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது, ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருப்பதற்கு சமமானது” என பதிவிட்டுள்ளார்.