மாஸ்டர் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் புது சிக்கல் ! பொங்கலுக்கு வருமா?

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:00 IST)
மாஸ்டர் படத்தை வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகைக்கு ரிலிஸ் செய்வதில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்களுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக அந்த படத்துக்கு 1000 தியேட்டர்கள் மேல் ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதால் ஏப்ரல் மாதத்தின் போது ரிலீஸ் செய்ய வேண்டும் என வெளிநாட்டு உரிமைகளை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்