’மாஸ்டர்’ மீண்டும் ஓடிடியிலா? அமைச்சரின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

திங்கள், 7 டிசம்பர் 2020 (17:42 IST)
தனது தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சுமார் 1000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்காததால் உலகம் முழுவதும் இந்த படத்தை ஒரே நாளில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக உலகம் முழுவதும் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடலாம் என்று திடீரென படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாக  கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை ஓடிடியில் படத்தின் தயாரிப்பாளர் ரிலீஸ் செய்ய முன் வந்தால் அதற்கு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். திரையரங்குகளில் வெளியிட வலியுறுத்துவோம் என்று இன்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியுள்ளார்
 
’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் கூறியிருந்த நிலையில் திடீரென ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்