சூர்யா சுதா கொங்கரா படத்தில் இணைகிறாரா மாதவன்? லேட்டஸ்ட் தகவல்!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:13 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாதவனைப் படக்குழு அணுகியுள்ளதாம். ஆனால் இதுவரை அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா மற்றும் மாதவன் ஆகிய இருவரும் ஆய்த எழுத்து மற்றும் ராக்கெட்ரி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்