சென்னையில் தொடரும் ‘விவேகம்’ படப்பிடிப்பு

Webdunia
வியாழன், 18 மே 2017 (12:46 IST)
அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்க இருக்கிறது.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. இதன் பெரும்பாலான காட்சிகள், வெளிநாட்டில்  படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் மட்டுமே சென்னையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கடைசி ஷெட்யூல், பல நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. கடந்த 12ஆம் தேதியுடன் அங்கு ஷூட்டிங் முடிந்து,  படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.
 
இந்நிலையில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால், விரைவில் சென்னையில் ஷூட்டிங் தொடங்க  இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.  பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்