'வாரிசு’ ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!

திங்கள், 9 ஜனவரி 2023 (12:40 IST)
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கு மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
தெலுங்கில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ம ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு படங்களும் சங்கராந்தி விருந்தாக ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது
 
எனவே விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு போதுமான தியேட்டர் கிடைக்காததால் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
 
எனவே தமிழில் வெளியான மூன்று நாட்கள் கழித்தே தெலுங்கில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்