நடிகர் விஜய்யின் படங்களில் பாடல்கள் எப்போதும் அதிரி புதிரி ஹிட்டாகும். மேலும் அவரே தனது படங்களில் பாடல்களை பாடியும் உள்ளார். ஆனால் முன்னணி பாடகரான எஸ் பி பி விஜய்க்கு அதிகமாகப் பாடல்களை பாடியதில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பிரியமானவளே படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த படத்தில் விஜய்க்காக எஸ் பி பி ஒரு பாடலை பாடினாராம். ஆனால் அந்த பாடல் தன் குரலுக்கு செட் ஆகவில்லை எனக் கூறி வேறு ஒரு பாடகரை வைத்து பாடவைத்தாராம் விஜய்.