அபூர்வ சகோதரர்கள்' ரைட்டருக்கு நன்றி சொல்லவில்லையா அட்லி? வெங்கட்பிரபுவின் 'மெர்சல்' கிண்டல்

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:43 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி சாதனை ஓப்பனிங் வசூலை குவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்த போதிலும் கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' உள்பட ஒருசில படங்களின் சாயல் இந்த படத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த இயக்குனர் வெங்கட்பிரபு, 'மெர்சல்' படம் பார்த்து வியந்தேன், விஜய்யின் நடிப்பு அட்டகாசம், இருந்தாலும் இயக்குனர் அட்லி, பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நன்றி என்று டைட்டில் கார்டு போட்டு இருக்கலாம்' என்று கிண்டல் செய்துள்ளார்.
 
அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு கதை வசனம் எழுதியது பஞ்சு அருணாச்சலம் என்பதையே வெங்கட்பிரபு குத்திக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் மங்காத்தா' உள்பட ஒருசில படங்கள் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக விஜய் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்