இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது.
இந்த டிரைலர் ரிலீஸ் நிகழ்வில் படத்தின் இயக்குனரான தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷன்களில் தான் கலந்துகொண்டால், ஊடகங்களின் முழுக் கவனமும் தன் மேல் விழுந்து விடும் என்பதால் தனுஷ் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படமான இட்லி கடை படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். அதனால்தான் இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.