அவரது ஜுஹு இல்லத்தில் இனிப்புடன் ஊழியர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாதபோதும், வீடியோ வைரலாகி வருகிறது.
அமிதாப்பச்சனின் இந்த செயலை ஒரு சிலர் பாராட்டிய போதும், அவரது அந்தஸ்து மற்றும் செல்வச் செழிப்புக்கு ரூ.10,000 பரிசுத் தொகை மிகக் குறைவு என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். "இது மிகவும் வருத்தமளிக்கிறது", "வெறும் 10,000 ரூபாய் வெட்கக்கேடு" என்று பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.