அவருக்கு எதிராக அதிமுக அதிக விமர்சனங்களைத் தெரிவிக்க கமலும் கடுமையாக விமர்சித்து, சமீபத்தில் லஞ்சப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அவர் செல்லுமிடமெல்லாம் பிரச்சாத்தின்போது, மக்கள் கூட்டம் கூடுகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் தொழிற்சங்கம் ரயில்வே துறையின் ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஐசிஎஃப் தொழிற்சங்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
எனவே நடிப்பில் மக்களிடம் மனதில் இடம்பிடித்துள்ள கமல்ஹாசன், அரசியலில் ஆட்சி செய்யும் வகையில் தனது ஒவ்வொரு முயற்சியை எடுத்துவருகிறார்.
அதன்படி கமல் கட்சியின் இந்த முதற்தொழிற்சங்கம் அவரது கட்சிக்கு மக்களிடையே உள்ள அங்கீகாரத்தைக் காட்டுகிறதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் சம்பளம் கொடுக்கப்படும் என கூறியுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு கமலை விமர்சித்துள்ளார். அதில்,
உலகத்தரம் உள்ள கமல்ஹாசன் தமிழகத்திற்கு நடிகாராகத் தேவை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.