கடந்த செப்டம்பர் மாதம் 100க்கும் மேற்பட்ட சீனா நாட்டைச் சேர்ந்த செயலிகள் ,பப்ஜி விளையாட்டுகளுக்கும், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பப்ஜி இந்தியா என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி பப்ஜி இந்தியா கேம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.