அப்போ மட்டும் டிவீட் போட்டீங்களே… அமிதாப்புக்கு எதிராக திடீர் ஆவேசம்!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:47 IST)
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அமிதாப் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் பேசாதது குறித்து காங்கிரஸ் கேள்வி  எழுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக வரலாற்றில் இல்லாத படிக்கு பெட்ரோல் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீகங்கா பகுதியில் பெட்ரோல் விலை 100.13 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் 99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வை கண்டித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் விலை ஏறியபோது அதைக் கண்டித்து இவர்கள் இருவரும் டீவிட் செய்தது குறித்து இப்போது மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆவேசம் அடைந்துள்ளது. இவர்களின் படப்பிடிப்புகள் மகராஷ்டிராவில் நடக்கவிடமாட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக பேசியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்