'தேவர் மகன்-2' படத்தில் கமலுக்கு பதில் வேறு நாயகன்?

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (11:24 IST)
இந்தியன் -2 படம் தனது கடைசி படம் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துவிட்டதால், தேவன் மகன்-2 படத்தில் வேறு கதாநாயகன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


 
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் பணிகளில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
 
இதனால், தற்போது இந்தியன் -2 படத்தில் வேகமாக நடித்துக்கொடுத்துவிட கமல் முடிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்துக்கு நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடையே  'இந்தியன் -2 படம்' தான் தனது கடைசிப்படம் என்று கமல் அறிவித்தாலும், அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபடும் என்று தெளிவுபடுத்தினார்.
 
இதனால் 'தேவன் மகன்-2' படத்தில் கமல் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் கமலுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகனை நடிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என  தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்