நடிகர் சூர்யாவின் புதுப்படம் ஒன்றில் ஓப்பனிங் சாங் பாடுபவர் இவரா ?

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (19:33 IST)
நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தின் பாடலைப் பற்றி இசையமைப்பாளர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சில தகவல்களை கொடுத்துள்ளார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த என்.ஜி.கே சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் கே. வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சூர்யா மற்றுமொரு புதுப்படத்தில் நடித்துவருகிறார். அதற்கு சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்பாடத்தில் பாடலைப் பற்றி ஜிவி பிரகாஷ்குமார் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
அதில், இந்த படத்தின் ஓப்பனிங் சாங்கை, சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்கணேஷ் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஒரு ஒப்பனிங் சங் என்றும் , இப்பாடல் வரிகளை ஏகாதேசி என்பவர் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
மேலும் இந்தப்  படத்தை சுதா கொங்கரா என்பவர் இயக்கி வருகிறார். அபர்ணா பாலமுரளி என்ற நடிகை இதில்  கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்