நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின்3 ஆம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.