பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.