வங்காளத்தில் பிரபல மாடலாகவும், பட நடிகையாகவும் இருந்து வந்தவர் பிதிஷா. கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்த பிதிஷா கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிதிஷா தற்கொலை செய்து கொண்ட பின்னர் மிகவும் மன வருத்தத்தில் இருந்த மஞ்சுஷா தொடர்ந்து பிதிஷா பற்றியே பேசி வந்த நிலையில் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார், நடிகையின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.