’இந்தித் திணிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" -கவிஞர் வைரமுத்து

புதன், 26 அக்டோபர் 2022 (18:32 IST)
‘’இந்தித் திணிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்ததுடன், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 வது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ளது.
 

ALSO READ: ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்- வைரமுத்து டுவீட்
 
அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், ஹிந்தி திணிப்பை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைரமுத்து சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சென்னை மாவட்ட தமிழ் இலக்கிய அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து வைரமுத்து தன் டிவிட்டர் பக்கத்தில், இந்தித் திணிப்புக்
கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத்
தலைமை கொண்டேன்

"இந்தி உங்கள் வீட்டு மரம்;
வளர்த்துக்கொள்ளுங்கள்
ஆனால், அதன் வேர்கள்
எங்கள் சுற்றுச் சுவரை
இடித்து விடாமலும்,
கிளைகள் ஜன்னல் கதவுகளை
உடைத்து விடாமலும்
பார்த்துக் கொள்ளுங்கள்;
பொறுத்துக் கொள்ள மாட்டோம்"
என்று முடித்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj

இந்தித் திணிப்புக்
கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத்
தலைமை கொண்டேன்

"இந்தி உங்கள் வீட்டு மரம்;
வளர்த்துக்கொள்ளுங்கள்
ஆனால், அதன் வேர்கள்
எங்கள் சுற்றுச் சுவரை
இடித்து விடாமலும்,
கிளைகள் ஜன்னல் கதவுகளை
உடைத்து விடாமலும்
பார்த்துக் கொள்ளுங்கள்;
பொறுத்துக் கொள்ள மாட்டோம்"
என்று முடித்தேன் pic.twitter.com/e1SHxZ9y2B

— வைரமுத்து (@Vairamuthu) October 26, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்