இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளரா? ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டாங்களே..!

Mahendran

சனி, 25 அக்டோபர் 2025 (12:50 IST)
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 9 தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. சமூக ஊடக பிரபலங்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்த சீசனில், வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, கானா வினோத், துஷார் உட்பட 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.
 
இந்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் வியானா, பிரவீன், கலையரசன், ரம்யா ஜோ, ஆதிரை, துஷார், அரோரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பிக் பாஸ் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஆதிரையை தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
இதன் மூலம், மூன்றாவது வார எவிக்‌ஷனில் ஆதிரை வெளியேறியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக ஆதிரையின் செயல்பாடுகள் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சக போட்டியாளரான எஃப்.ஜே.யிடம் அவர் தொடர்ந்து நடந்துகொண்ட விதம், கானா வினோத்தை உதைக்க செல்வது போன்ற செயல்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்தன.
 
இந்த நிலையில் விரைவில் சின்னத்திரை தம்பதியான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி வைல்டு கார்டு மூலம் நுழைய உள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்